Wednesday, March 3, 2010

ஓ... மனப்பெண்ணே...!

இப்போது நான் சொல்லப் போகிற விஷயம் சில பேருக்கு பிடிக்காமலோ அபத்தமாகவோ இருக்கலாம்! ஆனால், இதுவே நிதர்சனமான உண்மை.

கடந்த வாரம் எனது நண்பனின் நண்பனின் நண்பனுடைய திருமணத்திற்கு சென்றிருந்தேன்! அதாவது, நான் முன்பின் பார்த்திராத, பெயர்கூட தெரியாத ஒருவரின் திருமணம் அது!

வழக்கம்போல், நான், ஏன் அநேகமாக எல்லா ஆண்களும் அத்தகைய ஒரு சூழ்நிலையில் செய்கிற காரியத்தையே நானும் அன்று செய்து கொண்டிருந்தேன்! வேறொன்றும் இல்லை, Figure வெட்டிக்கொண்டு, அல்லது Sight அடித்துக்கொண்டு இருந்தேன்!

மனம் நிறைந்த figure ஒன்றும் தேறாத நிலையில், என்னை அழைத்து வந்த நண்பன்னை கடிந்துகொண்டேன்! அவனுக்கும் இது புதிதல்ல!

மணமகன் மேடைக்கு அழைத்துவரப்பட்டான், போகிற வழியில் எனது நண்பனை கண்டுக்கொண்ட அவன் கைக்குலுக்கி விட்டு, என் கையையும் குலுக்கிச் சென்றான்! (இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல என்று அலுத்துக்கொண்டேன்!)

புரோகிதர், அவர் வேலையை செவ்வனே செய்ய, நான் எனது நண்பனை திருமண விருந்தை பற்றி வினவ, சுத்த சைவ விருந்து என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினான்!

அரங்கில் திடிரென சலசலப்பு! வேறொன்றுமில்லை மணமகள் அழைத்துவரபட்டாள்! என் மனம் அத்தருணத்தில் அன்றிரவு அடிக்கபோகும் சரக்கு நிமித்தம் லயித்திருந்தது!

என் நண்பன் என்னை சீண்டினான்! நிமிர்ந்து பார்த்தேன் மணப்பெண்ணை...

அடடா அடடா பெண்ணே
உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஆனால் கண்டேன்
ஓராயிரம் கனவு
ஹே கரையும்
என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்

ஓ... ஓ... ஓ...
ஓ... மனப்பெண்ணே...!
ஓ... மனப்பெண்ணே...!
ஓ... மனப்பெண்ணே...!
ஓ... மனப்பெண்ணே...!
உன்னை மறந்திட முடியாதே!
ஓ... மனப்பெண்ணே...!
உயிர் தருவது சரிதானே...!

நம்புனா நம்புங்க! சத்தியமா இந்த பாட்டுத்தான் backgroundல ஓடியது!

முகம் தெரியாத நண்பனே! இன்றும் உன் முகம் எனக்கு நினைவில்லை! ஆனால் அவள் முகம் என்றும் மறக்காது!

முகம் தெரியாத நண்பனே! கொடுத்துவைத்தவன் நீ! பத்திரமாக பார்த்துக்கொள் அவளை...!